Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் Podcast By SBS cover art

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

By: SBS
Listen for free

About this listen

A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.Copyright 2025, Special Broadcasting Services Social Sciences
Episodes
  • ஆஸ்திரேலியாவில் புகலிடம்: கொள்கை, நடைமுறை மற்றும் தனிமனித தாக்கம்
    Jun 16 2025
    அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    11 mins
  • 16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்
    May 2 2025
    அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    12 mins
  • அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?
    Apr 23 2025
    தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    16 mins
No reviews yet