Guru Mithreshiva - வெற்றி, தோல்வியை எப்படிப் பார்ப்பது? Episode 12 Podcast By  cover art

Guru Mithreshiva - வெற்றி, தோல்வியை எப்படிப் பார்ப்பது? Episode 12

Guru Mithreshiva - வெற்றி, தோல்வியை எப்படிப் பார்ப்பது? Episode 12

Listen for free

View show details

About this listen

சீடன் ஒருவனை அவசர வேலையாக வெளியூர் அனுப்பி வைத்தார் குரு. அப்போது நள்ளிரவு. போக வேண்டியதோ காட்டுவழிப்பாதை. ‘‘இருளில் எப்படிப் போவது?'’ என்று கவலைப்பட்டான் சீடன். உடனே குரு அவன் கையில் ஒரு விளக்கைக் கொடுத்து, ‘‘இது உனக்கு வெளிச்சம் கொடுக்கும்'’ என்றார்.
‘சரி' என்று தலையசைத்துப் புறப்பட்ட சீடன் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தான். ‘‘குருவே, இந்த விளக்கின் வெளிச்சம் ஓரடி தூரம்தான் தெரிகிறது. நான் நீண்ட தூரம் இருளில் போகவேண்டும்’’ என்றான். குரு சிரித்தார். ‘‘முதல் ஓரடி நடந்ததும் அடுத்த அடிக்கான வெளிச்சம் உனக்குக் கிடைத்துவிடும். தொடர்ந்து பயணித்தால் போக வேண்டிய இடத்தை அடையலாம். இப்படித்தான் வாழ்க்கையும்’’ என்றார்.

No reviews yet